search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்வாமா என்கவுண்டர்"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட அவந்திபோரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அங்கு 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்கள் ஷவுக்கத் டார், இர்பான் வார், முசாபர் ஷேக் என்பதும் இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஷவுக்கத் டார் மீது பல கொலை வழக்குகள் பதிவாகி போலீசார் அவனை தேடி வந்தனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரம்ஜான் விடுமுறைக்காக வீடு திரும்பிய ராணுவ வீரர் அவுரங்கசிப் கடத்திச் சென்று கொல்லப்பட்ட வழக்கு, அக்கிப் அஹமது வாகேய் என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக ஷவுக்கத் டார் அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இதேபோல், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Terroristsplan
    புதுடெல்லி:

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன. #Terroristsplan 
    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வயநாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமார் குடும்பத்தாரை இன்று சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். #PriyankaGandhimeets #Pulwamaattack
    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
     
    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, இன்று மக்கம்குன்னு பகுதியில் உள்ள மறைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்த குமார் இல்லத்துக்கு சென்றார். வசந்த குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    கேரளாவில் முதல்முறையாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவி ஸ்ரீதன்யா சுரேஷ்-ஐயும் அங்கு சந்தித்த பிரியங்கா, அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #PriyankaGandhi #PriyankaGandhimeets #Pulwamaattack #VVVasanthaKumar #WayanadVVVasanthaKumar 
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. #PSL #IPL2019
    இஸ்லாமாபாத்:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்து விட்டது. 

    இதை எல்லாம் சகித்துகொண்டு இருக்க முடியாது என்பதால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது (பாகிஸ்தானை சீண்டிப்பார்க்கும் வகையில்) இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பவாத் அஹமத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் அதரவுபெற்ற பயங்கரவாதியால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதனால், நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்த வேளையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது நினைவிருக்கலாம். #PSL #IPL2019
    பாகிஸ்தானில் சிக்கி தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் முகத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் பெங்களூரு நகரை சேர்ந்த ஓவியர் உருவாக்கியுள்ளார். #BengaluruArtist #WingCommanderAbhinandan #Abhinandanportrait
    பெங்களூரு:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

    இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் முகத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் பெங்களூரு நகரை சேர்ந்த ஓவியரான ஏ.சி. குருமூர்த்தி என்பவர் ஓவியமாக உருவாக்கியுள்ளார்.

    அபிநந்தன் உண்மையான கதாநாயகன். நமது நாட்டுக்கு அவர் மரியாதை சேர்த்துள்ளார். எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக இந்த ஓவியத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் நான் உருவாக்கியுள்ளேன் என்கிறார்,  குருமூர்த்தி. #BengaluruArtist #WingCommanderAbhinandan #Abhinandanportrait #typewriterportrait  
    புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் அனுதாபியான ஆதில் என்பவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
     
    ஆயிரம் கிலோவுக்கு அதிகமான வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பயன்படுத்தி இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி ஆதில் என்பவன் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இதற்கு முன்னர் 3 முறை தாக்குதலுக்கான ஒத்திகை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    காஷ்மீர் மாநில போலீசாரின் விசாரணையில் இருந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக் கொண்டது. 

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    மாருதி இக்கோ (Maruti Eeco) ரகத்தை சேர்ந்தது. அதன் உரிமையாளரான சாஜத் பட் என்பவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேஹாரா பகுதியை சேர்ந்தவன். 

    புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவாகி விட்ட இவனும் ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி முன்னர் சமூக வலைத்தளங்களில் இவன் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளான் என்று தேசிய புலனாய்வு படையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
    உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதில் மோடி அரசு தீவிரம் காட்டுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Modigovernment #playingpolitics #jawansdeadbodies #MamataBanerjee
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என நாம் அனைவரும் சபதமேற்க வேண்டும் என இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

    தற்போது மத்தியில் நடைபெறும் ஆட்சி கைகளில் ரத்தக்கறை படிந்த மோடி, அமித் ஷா என்ற அண்ணன் - தம்பிக்கு சொந்தமான ஆட்சியாக மாறிவிட்டது. இந்த ஆட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் எதுவும் மந்திரிகளுக்கு கூட தெரியாத வகையில் இந்த அண்ணன் - தம்பியின் முடிவாக ஆகிவிட்டது.

    புல்வாமாவில் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், நமது வீரர்களின் உயிரை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    பாராளுமன்ற தேர்தலின்போது போர்போன்ற பதற்றநிலையை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் நமது வீரர்கள் சாகட்டும். அவர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்யலாம் என மத்திய அரசு இந்த தாக்குதலுக்கு இடம் அளித்தது எனவும் மம்தா குற்றம்சாட்டினார். #Modigovernment #playingpolitics #jawansdeadbodies #MamataBanerjee
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    திருப்பதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைமைக்கான தகுதிகளில் முக்கியமான தகுதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்னும் குறிப்புடன் எனது பேச்சை தொடங்குகிறேன். அவ்வகையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறோமா, இல்லையா? என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரதமரால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியும் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இந்த நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக பார்க்க வேண்டும்.

    ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் அந்த நாடே பேசுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பலமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ‏மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்னும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஆந்திராவுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை, மேக் இன் இந்தியா, ஸ்டிராட் அப் இந்தியா என பொய்மேல் பொய்யாக நாங்கள் சொல்ல மாட்டோம்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், மத்தியபிரசேதம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். 

    அதேபோல், ஆந்திர மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்காக நிச்சயமாக சிறப்பு மாநில அந்தஸ்தை நாங்கள் அளித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Baramullaencounter #Soporeencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #Baramullaencounter #Soporeencounter
    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை இன்று ஏற்றது. #NIAprobe #Pulwamaattack
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இச்சம்பவத்துக்கு பின்னர் தாக்குதல் நடந்த பகுதிக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த உயரதிகாரிகளும், தடயவியல் வல்லுனர்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்போருட்களின் அளவு மற்றும் வீரியம் தொடர்பான தடயங்களை சேகரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குறிப்புகளை அனுப்பி வைத்தனர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்வதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணையை இன்று ஏற்றுக் கொண்டது. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட அல்லது உயர் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வந்தன. 

    இந்த நடைமுறையில் சில பாகுபாடுகள் உள்ளதாக கருதிய மத்திய அரசு பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கவும், பயங்கராவாதிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை என்ற அமைப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #NIAprobe #Pulwamaattack 
    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaAttack #PulwamaEncounter
    புல்வாமா:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவற்றை முறியடித்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தின் மூலம் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் கோழைத்தனமாக செய்து உள்ளனர்.

    ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு மீண்டும் கைவரிசை காட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தை ‘சீல்’ வைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    நேற்று பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மேலும் அதிகரிக்கப்பட்டது. அப்போது புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் எனும் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் சி.ஆர்.பி. எப். வீரர்கள், உள்ளூர் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.

    நேற்று இரவு அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

    வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. எனவே கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கும், இந்த பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆகையால் அவர்களை உயிரோடு பிடிக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது திடீரென பயங்கரவாதிகள் அந்த வீட்டுக்குள் இருந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.



    பயங்கரவாதிகள் வீட்டின் நான்கு புறமும் இருந்து சுட்டதால் பாதுகாப்பு படையினர் சற்று பின்வாங்கி பிறகு தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அந்த வீட்டுக்குள் அதிரடியாக ஊடுருவவும் பாதுகாப்பு படையினர் முயன்றனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார். அவரது பெயர் டான்டியல். மற்ற வீரர்கள் சேவ்ராம், அஜய்குமார், ஹரிசிங் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த தாக்குதலில் மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குல்சார்முகமது என்ற வீரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    இதனால் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. துப்பாக்கி சண்டையில் வீட்டின் உரிமையாளர்கள் 2 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். அப்போது அந்த வீட்டுக்குள் 8 பயங்கரவாதிகள் இருப்பது உறுதியானது.

    அந்த 8 பயங்கரவாதிகளும் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த வீட்டை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    10.30 மணி அளவில் பாதுகாப்பு படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். இதனால் பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷீத் காஜி எனவும், மற்றொருவன் ஹிலால் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 6 பேர் அந்த வீட்டுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    புல்வாமா மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaAttack #PulwamaEncounter
    புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    இந்நிலையில், புல்வாமா என்கவுண்டரில் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பிரிவினைவாதிகள் தொடர்ந்து 3 நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள ஞாயிற்றுக்கிழமை வார சந்தை மூடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    என்கவுண்டரை தொடர்ந்து காஷ்மீரில் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் மொபைல் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. பி.எஸ்.என்.எல் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. #Pulwamaencounter #Peoplekilled #JammuKashmirStrike
    ×